there is no camera in jayalalitha icu

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.மேலும் எங்களால் எந்த அளவிற்கு சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளித்து விட்டோம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது வரவேற்பதாகவும், தங்களுடைய முழு ஒத்துழைப்பும் விசாரணையின் போது வழங்கப்படும் என தெரிவித்தார்

சிசிடிவி

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை எனஅப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் சிகிச்சை பற்றிய ஆவணங்கள் முழுவதும் தமிழக அரசிடம் தரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆனால் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறுத்துள்ளார் டாக்டர். ஹரிபிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் விசாரணை கமிஷன் விசாரிக்கும் போது, அமைச்சர்கள் குறித்து விளக்கம் அளிப்போம் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜெயலலிதா விவகாரம் தொடர்பாக அனைத்தும் ஏற்கனவே தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது