திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ல் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தமிழகத்தில் 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பட்ட்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்த இயலாது. அவசர அவசரமாக தேர்தலை நடத்த முடியாது. சரியான காலம் வரும்போது தான் தேர்தல் நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 

தேர்தல் ஆணையம் வாதத்தை முன் வைத்து 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அற்வித்து இருந்தார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்தே ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.