மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளால் கண்கலங்கித் தவித்து வருகிறார் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.
மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளால் கண்கலங்கித் தவித்து வருகிறார் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியை முழுமையாக தனதாக்கிக் கொண்ட மு.க ஸ்டாலின், தனது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முன்னிலைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். இதனால்தான் அவரது அண்ணன் எவ்வளவோ முயற்சித்தும் மு.க.அழகிரியால் மீண்டும் திமுகவில் இணைய முடியவில்லை.
அதேநேரம் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை ஒரே நாளில் இளைஞரணி செயலாளராக்கி தொடர்ச்சியாக அவரை புரமோட் செய்யும் வேலையை செய்து வருகிறார். கனிமொழியை பொறுத்தவரை பட்டும், படாமலும் தொட்டும், தொடாமலும் என்கிற பாலிசியைத்தான் ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். ஆனால், கனிமொழிக்கு கட்சி அமைப்பில் வலுவான பதவி ஒன்றில் அமர வேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
மகளிரணி செயலாளர் என்கிற உப்புச்சப்பில்லாத பதவியில் அவர் வேண்டா வெறுப்பாகவே தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், திமுகவில் நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் கனிமொழி. இதற்காக பல்வேறு வழிகளில் அவர் முயற்சியும் மேற்கொண்டதாகவும் தகவல். ஆனால், கனிமொழியின் ஆசை, நிராசையாகிவிட்டது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி அந்த தொகுதி மட்டுமின்றி பரவலாகவே தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கனிமொழியின் நாடார் சமூக பின்புலம் இதற்கு பிளஸ் பாயிண்டாக கூறப்படுகிறது. இத்தகைய பின்னணியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மீதும் அவர் ஒரு கண் வைத்துள்ளதால கூறப்படுகிறது. அதற்கும் முட்டுக் கட்டையாக இப்போது அந்தப் பொறுப்பில் எ.வ.வேலுவை அமர்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அரசல் புரசலாக அறிந்த கனிமொழி கோபத்தில் உச்சத்திற்கே சென்று விட்டாராம் . ‘’அப்பா, இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்னை அவமானப்படுத்துவதற்கும் ஒரு எல்லையில்லையா?’’என நெருங்கிய வட்டாரங்களில் கொந்தளித்திருக்கிறார். இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்கிற முடிவோடுதான் அண்மையில் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தை அடியோடு புறக்கணித்துள்ளார் என்கிறார்கள். இத்தனைக்கும் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தொலைபேசியில் அழைத்தும் கனிமொழி தனது நிலைப்பாட்டில் உறுதியோடு இருந்திருக்கிறார். அதுபோலவே சமீபத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் என்கிற நொண்டி சாக்கை சொல்லி அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார்.
இதனிடையே ஸ்டாலினுக்கு எதிராக அமைதிப் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கும் கனிமொழியை அழகிரி அடிக்கடி தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 25, 2020, 12:17 PM IST