பள்ளி மாணவர்களிடையே அடிகரித்த போதை பழக்கம்… வீடியோ ஆதரத்துடன் குற்றம்சாட்டிய அண்ணாமலை!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு கூட எளிதாக கிடைக்கும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களின் புழக்கத்தை குறைக்க அரசு மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி பதில் கொடுத்த டி.ஆர்.பி ராஜா
இதனிடையே பள்ளி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்டை போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதன் காரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவன் பள்ளி சீருடையில் மது போதையில் தள்ளாடியபடி சாலையோரத்தில் விழுந்து கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிங்க: ராகுலின் யாத்திரையை பிரபலப்படுத்த பணத்தை வாரி இரைக்கும் காங்கிரஸ்... பேஸ்புக் பதிவுக்கு லட்சக்கணக்கில் செலவு!!
இந்த நிலையில், அதனை டிவிட்டரில் பகிர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் போதைப்பொருள் தலைமையிடமாக தமிழகம் மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கடந்த 18 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டது. தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக மாறிவிட்டது. திமுக அரசு செயல்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? பேராசை, ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் அனைத்தும் இணைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.