ராகுலின் யாத்திரையை பிரபலப்படுத்த பணத்தை வாரி இரைக்கும் காங்கிரஸ்... பேஸ்புக் பதிவுக்கு லட்சக்கணக்கில் செலவு!!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை பிரபலப்படுத்த காங்கிரஸ் பேஸ்புக்கில் விளம்பரங்களுக்கு பல லட்சங்களை செலவு செய்துள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை பிரபலப்படுத்த காங்கிரஸ் பேஸ்புக்கில் விளம்பரங்களுக்கு பல லட்சங்களை செலவு செய்துள்ளது. ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் வரை சென்றடைந்தது. இந்த பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் இந்தியாவை ஒன்றிணைப்பதும், ஒன்றுபட்டு நமது நாட்டை வலுப்படுத்துவதும் தான் என்று காங்கிரஸ் கூறுகிறது. இந்த யாத்திரையின் போது சாமானியர்கள் முதல் பல்வேறு அமைப்புகள், தலைவர்கள், கலைஞர்கள் என அனைவரையும் சந்தித்து ராகுல் காந்தி வருகிறார். ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் நேரடியாக சமூக வலைதளங்களில் ஒளிபரப்புகிறது. பாதயாத்திரையின் போது எடுக்கப்படும் ஒவ்வொரு படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படுகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தந்தையை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்... கர்நாடகாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வதோடு சமூக ஊடகங்களில் உள்ள யாத்திரையின் படங்கள் லட்சக்கணக்கான மக்களால் லைக் மற்றும் ஷேர் செய்யப்படுகிறது. ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கூட, ராகுல் காந்தி முன்பை விட இந்த நாட்களில் அதிகமாகக் காணப்படுகிறார். பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. ராகுல் காந்தி இந்திய மக்கள் மத்தியில் வலுவான தலைவராக உருவெடுத்து வருகிறார் என்று காங்கிரஸ் கூறிவருகிறது. இதனிடையே பாரத் ஜோடோ யாத்ரா தொடங்கியதில் இருந்தே, ராகுல் காந்தியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தன. இதையெல்லாம் பார்க்கும் போது, ராகுல் காந்தி தேசிய அளவில் பிரபலமான தலைவராக வலம் வருவதைப் போலவும், அதுவே மக்களின் சமூக வலைதளங்களில் அவர் ஆதிக்கம் செலுத்துவது போலவும் தெரிகிறது.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி மரணங்களில் 3வது இடத்தில் தமிழ்நாடு.. தொடரும் அவலம் ! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
இருப்பினும், இவை அனைத்தும் திடீரென்று மற்றும் தானாகவே நடக்கவில்லை, இது ஃபேஸ்புக்கின் விளம்பர செயல்முறை. இதில் மக்களைச் சென்றடைய ஒவ்வொரு பதிவுக்கும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய்களை காங்கிரஸ் செலவிடுகிறது. ஃபேஸ்புக்கின் விளம்பர தரவுகளைப் பார்த்தபோது, ஆச்சரியமான தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்தவும், மக்களை சென்றடையவும், ஒவ்வொரு பதவிக்கும் காங்கிரஸ் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகிறது. ஃபேஸ்புக் விளம்பர நூலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, ராகுல் காந்தியின் முகநூல் பக்கத்தில் விளம்பரங்களுக்காக காங்கிரஸ் இதுவரை பல லட்சங்களை செலவு செய்துள்ளது. இந்தச் செலவுகளில் பெரும்பாலானவை பாரத் ஜோடோ யாத்ராவிற்கு இடையே செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.