தந்தையை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்... கர்நாடகாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவின் பாகல்கோட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொன்று, அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பாகல்கோட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொன்று, அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் பரசுராம் குலாலி. 53 வயதான இவருக்கு 20 வயதில் வித்தலா என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வித்தலா, தனது தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக் கொலை.. விவசாயி தற்கொலை..!
குற்றத்தை ஒப்புக்கொண்டதன்பேரில் வித்தலாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுக்குறித்து போலீஸார் கூறுகையில், பரசுராம் குடித்துவிட்டு வித்தலாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 6) தந்தையின் கொடுமை தாங்க முடியாத வித்தலா, இரும்பு கம்பியை எடுத்து தந்தையை அடித்து கொன்றார்.
இதையும் படிங்க: இரவு முழுவதும் ரூம் போட்டு பள்ளி மாணவி பலாத்காரம்... தலைமை ஆசிரியர் வெறிச்செயல்..!
அதை தொடர்ந்து, வித்தலா பரசுராமின் உடலை 30 துண்டுகளாக வெட்டி, பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் நகரின் புறநகர்ப் பகுதிக்கு அருகில் உள்ள அவர்களது சொந்த பண்ணையில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.