திருவண்ணாமலை அருகே பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக் கொலை.. விவசாயி தற்கொலை..!
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு த்ரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
இதையும் படிங்க;- பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்! போலீஸ் குவிப்பு..!
இந்த நிலையில், பழனி அதே ஊரைச் சேர்ந்த ஒருவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். பழனிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். அவருக்கு கடன் பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே பகுதியில் வசிக்கும் வள்ளியின் தாய் ஜானகி சமாதானப்படுத்தியுள்ளார். நேற்று இரவு குடிபோதையில் வீடு திரும்பிய பழனி, குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார்.
இந்த நிலையில் ஜானகி இன்று காலை வழக்கம் போல் மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்க்க சென்றுள்ளார். கதவு திறந்திருந்தது. சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, முதல் அறையில் பழனி பிணமாக கிடந்தார். உடலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மற்றவர்களை தேடியபோது வள்ளி, த்ரிஷா, மோனிஷா, தனுஷ், சிவசக்தி ஆகியோர் கழுத்து, தலை அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பூமிகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த ஜானகி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
குடும்பத்தையே கொலை செய்து விட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!