இரவு முழுவதும் ரூம் போட்டு பள்ளி மாணவி பலாத்காரம்... தலைமை ஆசிரியர் வெறிச்செயல்..!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட சில மாணவிகளை நவம்பர் 23ம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். இரவு தங்குவதற்காக ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுத்துள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்துள்ளார்.
11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு உணவில் போதை மருந்து கலந்து பலாதத்காரம் செய்த தலைமை ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட சில மாணவிகளை நவம்பர் 23ம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். இரவு தங்குவதற்காக ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுத்துள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்துள்ளார். மற்றொரு அறையில் அவரும் 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியும் ஒன்றாக தங்கியுள்ளனர்.
இதையும் படிங்க;- திருவண்ணாமலை அருகே பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக் கொலை.. விவசாயி தற்கொலை..!
அப்போது, பள்ளி மாணவிக்கு கொடுக்கப்பட்ட உணவில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து, அந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது ஆடைகள் கலைந்து, அலங்கோலமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி.. கதவை பூட்டி காவலுக்கு நின்ற 2வது மனைவி.!