Asianet News TamilAsianet News Tamil

எதற்கும் துணிந்தவன் வருது.. முடிஞ்சா அதை தடுத்துபார்.. பாமகவை வெறியேற்றும் மீசை ராஜேந்திரன்.

ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இருந்தது. இதை பாமக ஏன் தட்டிக் கேட்கவில்லை, மொத்தத்தில் பாமக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்தே சினிமா கதாநாயகர்களை எதிர்த்து அரசியல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

The yedarkum thunindavan movie will release .. if u can stop it .. Meesai Rajendran who is obsessed pmk.
Author
Chennai, First Published Nov 20, 2021, 9:34 PM IST

மிரட்டல் அரசியல் செய்யும் பாமகவிடம் நடிகர் சூர்யா ஒருபோதும் மன்னிப்பு கேட்க கூடாது என  பிரபல குணச்சித்திர நடிகர் மீசை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பாமக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தொடர்ந்து சினிமா நடிகர்களை வம்புக்கு இழுப்பதே அவர்களின்  அரசியல் உத்தியாக இருந்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாமக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் சூர்யாவை பணியவைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The yedarkum thunindavan movie will release .. if u can stop it .. Meesai Rajendran who is obsessed pmk.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில்சூர்யாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் பல்வேறு திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்தவரும் குணசித்திர நடிகருமாக மீசை ராஜேந்திரன் , பாமக நடிகர் சூர்வை வைத்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க முயற்சிக்கிறது என்றும் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, 

இந்த படம் வெளியாகி ஏழு நாளுக்கு பிறகு தான் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாமகவின் இந்த போராட்டத்திற்கு நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது. கடந்த ஆறு மாத காலமாக பாமக என்ற  கட்சி இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. எந்த மக்கள் பிரச்சினைக்கும் அவர்கள் குரல் கொடுக்கவில்லை, குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை கடந்த வாரம் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட சென்னை வெள்ளம் என எந்தப் பிரச்சினைக்கும் பாமகவினர் வரவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கேலண்டர் தங்களை காயப்படுத்திவிட்டதாக ஏற்படுத்துவதாக கூறிய உடன் அது நீக்கப்பட்டுவிட்டது. திரும்பவும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுவது நியாயமா தெரியவில்லை. இந்தத் திரைப்படம் மட்டும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் நிலைமை வேறு என பாமகவினர் மிரட்டுகின்றனர். அக்காட்சியின் வழக்கறிஞர் பாலு மிரட்டுகிறார். அடுத்து பொங்கலுக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளது, அதை சன் பிக்சர் ரிலீஸ் செய்வார்கள் அல்லது  ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் செய்ய வாய்ப்பிருக்கிறது. பாமக பாலு வேண்டுமென்றால், அந்தபடத்தை தடுக்கலாம். 

The yedarkum thunindavan movie will release .. if u can stop it .. Meesai Rajendran who is obsessed pmk.

ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இருந்தது. இதை பாமக ஏன் தட்டிக் கேட்கவில்லை, மொத்தத்தில் பாமக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்தே சினிமா கதாநாயகர்களை எதிர்த்து அரசியல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இப்படித்தான் மிரட்டினார்கள். இப்போது நடிகர் சூர்யாவை மிரட்டுகிறார்கள். பாமகவினர் எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் சூர்யா மன்னிப்பு கேட்பதாக தெரியவில்லை, என்னைப் பொறுத்தவரையில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் மன்னிப்பு கேட்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் இப்படி மிரட்டல் அரசியல் செய்பவர்களுக்கு அடிபணிந்து போகக்கூடாது என அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios