Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் முகத்தை முழுசா பார்க்க ஆசைபட்ட பெண்.. மாஸ்க கழட்டுங்க சார்.. பாக்கணும்னு அடம்.

மிக எளிய முறையில் பதவியேற்று தான் சாமானியர்களுக்கான முதல்வர் என்பதை அவர் அப்போதே மக்களுக்கு உணர்த்திவிட்டார். ஆனால் களத்தில் பம்பரமாய் சுற்றிச் சுழன்று கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, பேச்சைக் குறை செயலில் காட்டு என்ற தன் பாலிசியை மக்களுக்கு நிரூபித்து காட்டியுள்ளார் அவர்

The woman who wanted to see the whole face of Chief minister Stalin .. please remove the Maska  .. i want see.
Author
Chennai, First Published Aug 5, 2021, 8:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கான்வாயில் சென்றுகொண்டிருந்த முதல்வரை இடைமறித்து, " சார் உங்கள எப்ப சார் பார்க்கிறது? தயவுசெய்து மாஸ்க்கை கொஞ்சம் காழற்றுங்கள் சார்" என பெண் ஒருவர் கேட்க, உடனே சிரித்தபடியே மாஸ்க்கை கழற்றி அவர்களிடம் மனு பெற்ற சம்பவம். மிகுந்த சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரு சாமான்ய முதல்வரா என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும், அதை நிதானத்துடனும், பக்குவத்துடனும் அனுகக்கூடிய ஆற்றல் படைத்தவர், நமது முதலமைச்சர் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு அவர் நடத்திய சட்ட போராட்டமே அதற்கு சாட்சி. அமைதியின் வடிவான அவர், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் சாந்த சொரூபியாகவே மாறிவிட்டார். அதே நேரத்தில் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நிதானமாகவும், தெளிந்த நீரோடையாக இருந்து வருகிறது. கடுமையான சவாலை எதிர்கொண்டு பத்தாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியை கூட எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் கடந்துவந்தவர் அவர். 

The woman who wanted to see the whole face of Chief minister Stalin .. please remove the Maska  .. i want see.

மிக எளிய முறையில் பதவியேற்று தான் சாமானியர்களுக்கான முதல்வர் என்பதை அவர் அப்போதே மக்களுக்கு உணர்த்திவிட்டார். ஆனால் களத்தில் பம்பரமாய் சுற்றிச் சுழன்று கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, பேச்சைக் குறை செயலில் காட்டு என்ற தன் பாலிசியை மக்களுக்கு நிரூபித்து காட்டியுள்ளார் அவர். இதனால் அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும்

மக்களின் ஏகோபித்த ஆதரவு வழங்கி வருகின்றனர். எந்த சூழலாக இருந்தாலும் சாமானியர்களின் குரலுக்கும் செவி மடிப்பவராகவும் இருந்து வருகிறார் அவர். பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றாலும் சாலையோரம் நிற்கும் ஏழை ஏளிய மக்கள் கொடுக்கும் மனுக்களை புன்முறுவலுடன் பெற்றுக்கொள்ள அவர் தவறுவதில்லை.  குறைகளை  நிதானத்துடன் கேட்பதுடன் அவற்றின்மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்து ரியல் முதல்வராக வலம் வருகிறார் ஸ்டாலின். இதனால் அவர்மீதான மக்களின் நம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

The woman who wanted to see the whole face of Chief minister Stalin .. please remove the Maska  .. i want see.

தமிழகத்தில் அத்தனை அதிகாரத்தையும் ஒருங்கே பெற்று முதல்வர் பதவியில் அவர் இருந்தாலும், மிக சாமானியர்களும் எளிதில் அணுகும் வகையில் சாமானியர்களின் முதல்வராகவே வலம் வருகிறார் அவர். அந்த வகையில்  இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்த அவரின் கான்வாயை இடைமறித்த பெண் ஒருவர் அவரின் முகக் கவசத்தை கழற்றச் சொல்லி, அவரைப் பார்த்து பூரிப்படைந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  ஓசூரில் இன்று, வீடு தேடி வரும் மருத்துவம் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற அவரது காரை பார்த்த தொண்டர்களும், பொதுமக்களும் சிலர் அவரைப்பார்த்து கையசைத்தார். 

The woman who wanted to see the whole face of Chief minister Stalin .. please remove the Maska  .. i want see.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றுகொண்டிருந்த அவர்களின் வாகனம் பெண்கள் சிலர் தனியாக  நின்று பார்ப்பதை கண்டு நின்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், முககவசம் அணிந்திருந்த முதல்வரிடம், " சார் உங்கள எப்ப சார் பார்க்கிறது"  "தயவு செய்து ஒருமுறை மாஸ்க்கை கழட்டுங்க சார்"  என்றவுடன் அவரும் புன்முறுவலுடன் மாஸ்க்கை கழட்டி புன்னகை உதிர்த்தார். அவரின் முகத்தைப் பார்த்து பூரித்துப்போன அந்தப் பெண், அயராத உழைப்பு... விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றியின் மறுபெயர்தான் ஸ்டாலின் என முழங்கினார். அதைக்கேட்ட முதல்வரும் சிரித்தவாறே அவர்கள் கொடுத்து விண்ணப்பை பெற்று, நன்றிகூற மெல்ல அவரது வாகனம் அங்கிருந்து நகர்ந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios