Asianet News TamilAsianet News Tamil

அதிமுக செயலுக்கு எதிர்ப்பு...! திமுக செயலுக்கு ஆதரவு... சக்க போடு போடும் டிடிவி...! 

The Tamil Nadu Governor Panwarilal Purohid is also studying in Tanjore following Coimbatore cuddalore.
The Tamil Nadu Governor Panwarilal Purohid is also studying in Tanjore following Coimbatore cuddalore.
Author
First Published Jan 2, 2018, 11:12 AM IST


கோயம்புத்தூர் கடலூரை தொடர்ந்து தஞ்சையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்கிறார். 

தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார். 

அதன்படி கோயம்புத்தூர், கடலூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், கோவை, கடலூரை தொடர்ந்து தஞ்சையில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று காலையிலேயே தஞ்சை சென்றார். 

இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  

தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் கலை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

அங்கு நடைபெற்ற கைவினை கண்காட்சி அரங்குகளை ஆளுநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை சென்றுள்ள ஆளுநர் புரோஹித் இன்று பல்வேறு இடஙக்ளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 


பிற்பகலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பன்வாரிலால் புரோகித், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கிறார். பின்னர், திருவையாறில் தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவை ஆளுநர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் மாவட்டங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்துவதற்கு டி.டி.வி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரானது எனவும் முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனை பற்றி கவலைப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios