Asianet News TamilAsianet News Tamil

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது..! சட்ட மசோதா தாக்கல் செய்து அதிரடி காட்டும் தமிழக அரசு

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது எனவும், பணியில் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழக அரசு கொண்டு வந்த  சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
 

The Tamil Nadu government has filed a bill that states that one cannot join government jobs without mastering Tamil
Author
First Published Jan 13, 2023, 12:35 PM IST

அரசு பணி- தமிழ் கட்டாயம்

தமிழக அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டது. டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், மாநிலத்தின் அலுவல் மொழி அதாவது, தமிழ் மொழி குறித்த போதிய அறிவு பெற்றிருந்தாலன்றி, அவர் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணி எதிலும் நியமனம் செய்யத் தகுதியுடையவர் ஆவார் என கூறப்பட்டுள்ளது. 

அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!

The Tamil Nadu government has filed a bill that states that one cannot join government jobs without mastering Tamil

இரண்டாண்டில் தமிழ் தேர்வு

மேலும் ஆட் சேர்ப்பிற்கான விண்ணப்பத்தின் போது தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள். தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால், அவர்கள் பணியமர்த்தப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுகள் கால அளவிற்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறினால், அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநில அரசுத் துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை 100  விழுக்காடு அளவிற்கு ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு, ஆட்சேர்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கல்லூரி இல்லாத தொகுதியில் புதிய அரசு கல்லூரி..!சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
 

Follow Us:
Download App:
  • android
  • ios