தமிழக அரசு. மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுடன் கொரனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில்,  நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சட்டம் ஒழுங்கு ஐ.ஜி திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி பணிகளை கண்காணிக்க கால்நடைத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் முகாம், தூய்மைப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

சுகாதார கட்டமைப்பு, கொரனா சிறப்பு சிகிச்சை மையங்கள், மற்றும் தனியார் சிகிச்சை மையங்களை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பும்பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி செல்லும் பணியை கண்காணிக்க தனி குழு, போக்குவரத்தை கண்காணிக்க, நிவாரண உதவி மற்றும் பொது நிவாரண நிதியை கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பணிகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.