அரசியல் தலைவர்கள் மறைவு..! இரங்கல் தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு..
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா. இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கு மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சட்ட பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சட்ட பேரவை கூட்டம் தொடங்கியது
தமிழக சட்ட பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமீது இப்ராகிம், கே கே வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ் புருஷோத்தமன் , திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், எம் ஏ ஹக்கீம், கோவை தங்கம் உள்ளிட்ட 10 மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்
இதனையடுத்து இராமநாதபுரம் இளைய மன்னர் இராஜ.நாகேந்திர குமரன் சேதுபதி ,விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத்.மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலுஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் மறைவு குறித்து பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்