சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி, அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இதனால், திமுக நிர்வாகிகள் திணறலுடன், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். கருணாநிதி சிலை திறப்பு  விழாவை முடித்த அவர் நேற்று காலை திருச்சி திமுக மாவட்ட செயலாளர் நேருவின் சென்னை சிஐடி காலனி வீட்டிற்கு சென்றார். சால்வையுடன் காலையிலேயே வந்த செந்தில்பாலாஜியை பார்த்த நேருவிற்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. 

தொடர்ந்து நேற்று மதியம் கரூர் சென்ற அவர் மாலை மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், கே.சி.பழனிச்சாமியை ஆகியோர் வீட்டுக்கு சென்று சாலை அணிவித்தார்.

இதைதொடர்ந்து, வரும் 27ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் செல்ல இருக்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்த மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. அன்று திமுக நிர்வாகிகளை செந்தில்பாலாஜி சந்திப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சென்னையில் இருந்து வந்த உடனேயே அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 

இதுபோல் செந்தில்பாலாஜி, எந்த ஈகோவும் இல்லாமல் நிர்வாகிகளை வீடு தேடி செல்லும் வித்தியாசமான அணுகுமுறை.. திமுகவினருக்கு பெரும் திணறலையும், இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.