The state government is doing well with the use of a dengue detector in 40 seconds BJP state president Datuksi Chaudhirajan said.

40 நொடிகளில் டெங்குவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி அரசு சிறப்பாக செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவிகள் செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. 

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 40 நொடிகளில் டெங்குவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவிகள் செய்யும் எனவும் தெரிவித்தார்.