தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தது தொடர்பாக சபாநாயகர் தனபாலை சந்தித்து டிடிவி தரப்பு  4 அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்தனர். போதிய விளக்கம் இல்லாததால் கால அவகாசம் அளித்தார் தனபால். 

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் பூபதியை சந்தித்து 4 எம்எல்ஏக்களும் இன்று விளக்கம் அளித்தனர்.
தமிழக பேரவைச் செயலர் பூபதியை இன்று பிற்பகலில் சந்தித்த தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், சுப்ரமணியம், பழனியப்பன் ஆகியோர் சந்தித்தனர். 

அப்போது, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.