Asianet News TamilAsianet News Tamil

நிலைமை ரொம்ப மோசம்... கதறும் கேரளா... திடீரென வயநாடு புறப்பட்ட ராகுல் காந்தி..!


அக்டோபர் 19 முதல் 21 வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
 

The situation is very bad ... screaming Kerala ... Rahul Gandhi left Wayanad suddenly
Author
Kerala, First Published Oct 17, 2020, 5:05 PM IST

அக்டோபர் 19 முதல் 21 வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைதனது மக்களவை தொகுதியான வயநாட்டுக்கு செல்ல இருக்கிறார்.

 The situation is very bad ... screaming Kerala ... Rahul Gandhi left Wayanad suddenly

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமே, வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்வதுதான். ராகுல் காந்தியின் பயணத் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு அதிகாரிகளுடன் கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்.The situation is very bad ... screaming Kerala ... Rahul Gandhi left Wayanad suddenly

இந்த கூட்டத்திற்கு பின்னர் கல்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அன்றைய இரவு தங்குகிறார். அக்டோபர் 20ஆம் தேதியன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அக்டோபர் 21ஆம் தேதியன்று மனந்தவாடி மாவட்ட மருத்துவமனையை விசிட் செய்கிறார் தனது மக்களவை தொகுதியான வயநாட்டுக்கு செல்ல இருக்கிறார். மருத்துவமனை நிலவரத்தை கண்ட அறிந்த பிறகு கண்ணூர் விமான நிலையத்திற்கு செல்வார். அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்து சேருவார்.The situation is very bad ... screaming Kerala ... Rahul Gandhi left Wayanad suddenly

நேற்று ஒரே நாளில் கேரளத்தில் 7,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கேரளத்தில் 95,008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2,28,998 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,113 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios