பாஜகவில் இருந்து திடீரென விலகிய சேலம் மாவட்ட செயலாளர்..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறியதால் அண்ணாமலை அதிர்ச்சி

பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது பாஜகவின் சேலம் மாவட்ட செயலாளர் சோலைக்குரமன் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

The Salem district secretary quit the party due to his dissatisfaction with the BJP leadership

அதிமுக- பாஜக மோதல்

அதிமுக- பாஜக இடையே அரசல் புரசலாக இருந்த வந்த மோதல், பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததையடுத்து மேலும் மோதலை அதிகரித்தது. இந்தநிலையில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும், திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது அண்ணாமலை கோரிக்கை தெரிவித்தார். இந்தநிலையில் பாஜக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.சோலைக்குமரன் பாஜக வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாக விலகுவதாக கூறியுள்ளார். 

கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள்..! டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

The Salem district secretary quit the party due to his dissatisfaction with the BJP leadership

சேலம் மாவட்ட செயலாளர் விலகல்

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த குட்டி என்கிற சோலை குமரன் கூறும்போது,  சேலம் மாவட்டத்தில் பாஜக இல்லாமல் போகும் நிலைமை உருவாகி உள்ளது.  இதற்கு காரணம் இங்கு உள்ள முக்கிய நிர்வாகிகள் தான் என குற்றம் சாட்டினார். சேலம் கிழக்கு மாவட்டத்தில் நான் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரவித்தார். என்னை போல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த கட்சியை விட்டு வெளியேறி உள்ளதாக கூறினார்.  எனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்பொழுது பாஜகவை விட்டு வெளியேறி விட்டனர். சேலம் கிழக்கு மாவட்டத்தில் கட்சி பணிகள் செய்வதற்கு தடை மற்றும் குளறுபடிகள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அண்ணாமலையை அதிர்ச்சி அடையவைத்து்ள்ளது.

இதையும் படியுங்கள்

டிடிவி தினகரன் அணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த அமைப்புச் செயலாளர்..! உற்சாகத்தில் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios