டிடிவி தினகரன் அணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த அமைப்புச் செயலாளர்..! உற்சாகத்தில் இபிஎஸ்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிர்வாகிள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார். இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி பொதுச்செயலாளாரக டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தநிலையில் இபிஎஸ்- ஓபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என நிர்வாகிகளால் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
அமமுக டூ அதிமுக
இந்தநிலையில் தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஓட்டு சதவிகிதம் பாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுகவிற்கு இழுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன், அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன்,
உற்சாகத்தில் அதிமுக
அம்மா முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.சிவசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், வர்த்தக அணி, இளைஞர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் பிரிவு, வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.இந்தநிலையில் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடலூர் மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பாலமுருகன்,
அதிர்ச்சியில் டிடிவி தினகரன்
திட்டக்குடி நகரச் செயலாளர் S. சக்திவேல், நகர பேரவைச் செயலாளர், ராஜாராம் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணிச் செயலாளர் திரு. சுதாகரன், வி. சாந்தாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. S. லட்சுமிகாந்தன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திரு. ராஜசேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. கணேசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
இதையும் படியுங்கள்
டிடிவி தினகரன் கூடாரத்தையே திட்டம் போட்டு காலி செய்யும் எடப்பாடி..! அதிர்ச்சியில் அமமுக நிர்வாகிகள்