சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசுதிரும்ப பெறவேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு அது ரூ.660 ஆக அதிகரித்தது. 

 

தற்போது மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.710-க்கு விற்கப்படுகிறது. இது நடுத்த ஏழை மக்களின் அன்றாட வாழ்வின் மீது தொடுக்கும் தாக்குதல் ஆகும். ஏற்கனவே மானிய சிலிண்டர் பெறும் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகையை செலுத்தவில்லை என்று பொதுமக்களி டையே கடும் அதிருப்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் விலையை உயர்த்தியது  வேதனைக்குரியது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் அதற்கேற்ப  விலைக்குறைப்பு  நடவடிக்கை எடுக்காமல், தற்போது பதினைந்து நாட்களில் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது எளிய மக்களை முடக்கும் செயலாகும். மத்திய அரசின் இந்த விலை உயர்வை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.மேலும் இந்த விலை உயர்வை திரும்பப்பெற்று பழைய விலையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி  கேட்டுக்கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.