எட்டு வழிச் சாலைக்காக கல் நட்டவர்கள் ஆட்சியில், இயற்கை சமாதிக் கல்லை நட ஆரம்பித்துவிட்டது” என்றும் தனது பேச்சில்  தாறுமாறாக அனல் பறக்க பேசியுள்ளார் தினகரன்.

எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று  கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முட்டை விவகாரம் அணுகுண்டாக வெடிக்கும் என்று நான் அன்று சொன்னேன். தற்போது சென்னையில் பிடிக்கப் பிடிக்கப் பணமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆட்டு வியாபாரியாக இருந்தவரின் வீட்டில், அவரின் கார்களில் 180 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 105 கிலோ தங்கம் வரை பிடிபட்டுள்ளது. இதெல்லாம் ஆரம்பம்தான். பல அமைச்சர்கள் பயந்துகொண்டு உள்ளனர். அவர்களின் உதவியாளர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் நலனில் அக்கறையோடு இந்த ரெய்டுகள் நேர்மையாகத் தொடர்ந்தால் இந்த ஆட்சி இருக்காது என்பதுதான் உண்மை. எட்டு வழிச் சாலைக்காக கல் நட்டவர்கள் ஆட்சியில், இயற்கை சமாதிக் கல்லை நட ஆரம்பித்துவிட்டது” என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எனக்குத் தெரிந்து அவருக்கு ஒரே மகன்தான், ஒரே சம்மந்திதான் உள்ளார். அவரும் பேப்பர் மில் வைத்திருந்தவர். கடந்த இரு ஆண்டுகளில் அவர் திடீர் காண்டிராக்டராக உருவாகி, அவரது நிறுவனத்திற்கு மட்டும் தற்போது பல ஆயிரம் கோடி டெண்டர்கள் கிடைக்கின்றன. வருமான வரிச் சோதனையின் மூலம் தற்போது அந்த உண்மை வெளிவந்துள்ளது என பேசினார். 

மேலும் பேசிய அவர் இதுபோல, பல உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று குறிப்பிட்ட தினகரன்,  தற்போது நடக்கும் ரெய்டுகளைப் பார்த்தால் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஆட்சியாளர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்” என்றும் பேசினார்.