ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 வாக்காளர்கள் காயடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 5 வாக்காளர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த முதியவர் வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.