Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட இதை கண்டு கொள்ளவில்லையே... தமிழக அரசே இது நியாயமா..? கொரோனா வார்டு போல மாறிய பத்திரப் பதிவுதுறை..!

பத்திரப்பதிவு துறை திறப்புக்கு திமுக போன்ற எதிர் கட்சிகள் கூட விமர்சிக்கவில்லை. தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை திறப்பு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

The Register office turned to Corona Ward
Author
Tamil Nadu, First Published Apr 21, 2020, 5:36 PM IST

ஒரு நாளைக்கு 24 டோக்கன் நேற்று முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கொரோனா வார்டு போல தோற்றமளிக்கும் வகையில் பத்திரப்பதிவு அலுவலர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. 

 ஏப்ரல் 20 முதல் பத்திரபதிவு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பத்திரவு பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு அலுவலர்கள் பணிக்கு வந்திருந்தனர். அலுவலத்திற்குள் வருபவர்கள் சோப்பு நீரில் கையைக் கழுவிவிட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் நேற்று மட்டும் 583 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. The Register office turned to Corona Ward

புகைப்படம்: பாதுகாப்பு கவசங்கள் குறைபாடுடன் மருத்துவமனைகள்... உயர் பாதுகாப்பு கவசங்களுடன் பத்திரப்பதிவு அலுவலர்கள்...

ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் பாதுகாப்பு கவசத்தை அணிந்து பணியாற்றுவது கொரோனா வார்டு போல தோற்றமளிக்கிறது. மருத்துவமனைகளில், பொது இடங்களில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இது தேவையான என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மருத்துவர்களுக்கு ,வைரஸ் தொற்றாத பாதுகாப்பு கவசத்தை அனுப்பாமல், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அனுப்புகிறீர்களே. இது அநியாயமா?மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை நிலவும் போது தமிழக அரசு இப்படி வீணடிக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகங்களை ஊரடங்கு முடிந்தவுடன் திறந்தால் என்ன..? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

The Register office turned to Corona Ward

பத்திரப்பதிவு துறை திறப்புக்கு திமுக போன்ற எதிர் கட்சிகள் கூட விமர்சிக்கவில்லை. தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை திறப்பு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கவசங்களை பார்த்தால் அது உச்சம்’’என பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios