முதல்வர் மாவட்டத்திலேயே பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு என பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். இராணுவ தடவாள பொருட்களை  உற்பத்தி செய்ய மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என  வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக பாஜக சார்பில்  போராட்டம் நடைபெறும். தேசிய மாநில நிர்வாகிகள் போராட்டத்தில்  பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில்  மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தபடும். பசுமை வழி சாலை திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட மக்களின் நலத்திட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் சில அமைப்புகள் போராடி வருகின்றன. எனவே மாநில அரசு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதற்கு முன்னாள் கூட்டணி குறித்து கூறிய கருத்துக்களை முதலில் கடைபிடிக்கட்டும் என தெரிவித்தார். 

பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ள பகுதிகளில் முறையாக அணுகுவோம். திட்டத்தை முழுமையாக எதிர்க்கும் நோக்கில் மத்திய அரசு  செயல்படாது.பசுமை வழி சாலை திட்டத்தில் சுற்றுசூழல் அனுமதி பெற்ற பின்தான் செயல்படுத்த படுகிறது என விளக்கமளித்துள்ளார். மேற்கு மாவட்ட தொழில் வளர்ச்சி மேம்பட சாலை முக்கியம். வாகன உற்பத்திற்கு ஏற்ற வகையில் சாலை அமைக்கப்பட  உள்ளது. ஆகாஸ் யோகனா திட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் என்றார்.  தமிழகத்தில் ஸ்மாட் சிட்டி வேலை தொய்வாக  நடைபெறுகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். என அவர் வலியுறுத்தியுள்ளார். பண மதிப்பிழப்புக்கு பின் 3 லட்சம் போலி நிறுவன கணக்குகள் முடப்பட்டுள்ளது.சுவிஸ் வங்கியில் வரி கட்டாமல் பணம் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.