Asianet News TamilAsianet News Tamil

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR) திரும்ப பெற வேண்டும்... திரைப்பட இயக்குநர் கோரிக்கை..!

வாக்கு வங்கி ஒன்றையே மையமாக வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR)நடைமுறையில் வைத்துள்ளதாக இயக்குனர் கேந்திரன் முனியசாமி கடும்குற்றம்சாட்டியுள்ளார். 

The Prevention of Torture Act (PCR) should be withdrawn ... Film director's request
Author
Tamil Nadu, First Published Jul 15, 2021, 11:30 AM IST

வாக்கு வங்கி ஒன்றையே மையமாக வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR)நடைமுறையில் வைத்துள்ளதாக இயக்குனர் கேந்திரன் முனியசாமி கடும்குற்றம்சாட்டியுள்ளார். 

அய்யன், சேது பூமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேந்திரன் முனியசாமி. அடுத்து ஓங்காரம் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதனையடுத்து படம் வெற்றிபெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டம் (PCR)பல சமுதாய மக்களின், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது.The Prevention of Torture Act (PCR) should be withdrawn ... Film director's request

இந்த வன்கொடுமை சட்டத்தை பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே தவறாக பயன்படுத்தும் நிலை தமிழகத்தில் உள்ளது. எனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். ஜாதி ஒழிப்பை காரணம் காட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் ஜாதி ஒற்றுமையை முன்னெடுக்க மறுக்கின்றனர். எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள வன்கொடுமைச் சட்டத்தை பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தை இந்த ஓங்காரம் படத்தின் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாய மக்கள் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் விரும்பாத இந்த சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காக நடைமுறையில் வைத்துக்கொண்டு பல சமுதாயம் இளைஞர்களின் கனவுகள், லட்சியங்கள் ஏதோ ஒரு வகையில் பாதித்து வருவதால் இச்சட்டத்தை நீக்க வேண்டும்’’ என்றார்.The Prevention of Torture Act (PCR) should be withdrawn ... Film director's request

படித்த இளைஞர்களை குறிவைத்து பிந்த் பிசிஆர் சட்டத்தை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும், இந்த சட்டத்தை வைத்து பிற வகுப்பினரை குறிப்பிட்ட சாதியினர் மிரட்டி காரியம் சாதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஓங்காரம் படம் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios