சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.மேலும் பரோல் பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது என்றும் சிக்கல்கள் தொடர்பாக ஆலோசித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது

இதையடுத்து சசிகலா பரோல் கேட்டதாகவும் அதற்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது. 

ஆனால் சிறை நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. சசிகலா தரப்பில் பரோல் கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்தது. 

இந்நிலையில், சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.மேலும் பரோல் பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது என்றும் சிக்கல்கள் தொடர்பாக ஆலோசித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.