பெங்களுரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் ஒருவர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால், நிகழ்ச்சியை பாதியில் முடித்துவிட்டு அவர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து தொடங்கும் முதல் கடுமையாக விமர்சித்து வருபவர் திருமாவளவன். விசிக கட்சி தலைவரான இவர் சனாதன கொள்கைகளை பின்பற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். கட்சியில் சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், செய்தியாளர் சந்திப்பில் கூட பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இந்திய அளவில் பாஜக எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதை அழுத்தமாக கூறி வருகிறார்.
இந்நிலையில் பெங்களுரூவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திருமாவளவன் உரையாற்றும் போது, பாஜகவை விமர்சித்தும் பிரதமர் மோடியை வில்லன் என்று குறிப்பிட்டு உரையாற்றியதாக கூறப்படுகிறது. அப்பொழுது கூட்டத்தில் எதிர்பார்காத வகையில் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபரோ, பிரதமர் மோடி வில்லன் இல்லை என்றும் இந்த தேசத்தில் ஹீரோ என்றும் கோஷமிட்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவிற்கு ஆதரவாகவும் மைக் பிடித்து அந்த நபர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் நில்லுங்கள் தொல்.திருமாவளன் சார். நான் சொல்ல வருவதை கேளுங்கள். உங்கள் மேல் எனக்கு மரியாதை உள்ளது. நீங்கள் உங்கள் பேச்சில் மோடி இந்த நாட்டின் வில்லின் என்று பேசியதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும். மோடி இந்த நாட்டின் ஹீரோ என்று அவர் கத்தி பேசினார்.
இதனால் வேறு ஏதும் அசபாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில், நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு, திருமாவளவன் மேடையில் இருந்தே வேகமாகபுறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்சிகளை பாஜகவினர் பகிர்ந்து, தமிழகத்திலும் இதுபோன்று விரைவில் நடக்கும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
