Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே ரொம்ப உஷாரா இருங்க.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு பத்திரமா இருங்க.

31.10.2021 முதல் 02.11.2021 வரை:, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

The people of Tamil Nadu should be very vigilant .. especially if the people of this district are safe for the next 4 days.
Author
Chennai, First Published Oct 29, 2021, 12:44 PM IST

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக  29.10.2021:, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சிராப்பள்ளி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

The people of Tamil Nadu should be very vigilant .. especially if the people of this district are safe for the next 4 days.

மேலும், 30.10.2021: தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள்: BIG Breaking: ரஜினிக்கு முளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு சரி செய்யப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார்.

31.10.2021 முதல் 02.11.2021 வரை:, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 12, காரைக்கால் (காரைக்கால்) 10, திருவாரூர் (திருவாரூர்) 8, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 7, தக்கலை (கன்னியாகுமரி) 6, நன்னிலம் (திருவாரூர்) 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஆய்க்குடி (தென்காசி), கூடலூர் (தேனி), ராதாபுரம் (திருநெல்வேலி), இரணியல் (கன்னியாகுமரி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 4, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), சுருளகோடு  (கன்னியாகுமரி), பாண்டவையார் தலைமை (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), அணை (கன்னியாகுமரி ), கலியல் (கன்னியாகுமரி) தலா 3,

The people of Tamil Nadu should be very vigilant .. especially if the people of this district are safe for the next 4 days.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள்: 29.10.2021:தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.30.10.2021,31.10.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி / பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: போலீஸ் விசாரணையில் தனபால்.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு.

இதே நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

The people of Tamil Nadu should be very vigilant .. especially if the people of this district are safe for the next 4 days.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25ல் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த ஏழு நாட்களுக்கு கன முதல் முதல் கனமழை செய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடதக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios