ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு டெல்லி மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள். இதை அக்கட்சி நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும். என ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பாஜகவை சீண்டியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் ஜெய் நாராயண் வியாஸின் பிறந்தநாளையொட்டி, தலைநகா் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருகிறது. டெல்லி சட்டமன்ற தோ்தல் பிரசாரத்தின்போது, பாஜக தலைவா்கள் ஆம்ஆத்மி கட்சி தலைவா்கள் உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். பாஜகவுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்றுகொடுத்திருக்கிறார்கள்.இந்த பாடத்தை பாஜக நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும்.டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது.

ராஜஸ்தான் மாநில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய அரசு நினைக்கிறது.ஆனால், மக்களின் குறைகளை கேட்டறித்து எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.