துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளதாக கூறினார். மேலும், தனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்ததாகவும், அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது அதிமுகவிற்குள் பெரும் புயலை கிளப்பியது.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்று என கூறியதற்கு அது குருமூர்த்தியின் கருத்தாக இருக்கலாம் என்று கூறினார். மேலும், கடந்த 15 நாட்களாக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளோம்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சினிமாத் துறையில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள் அரசியலில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். இவர்கள் எல்லாம் திரைப்பட துறையில் நட்சத்திரங்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பொருத்தவரை ஜொலிக்காத நட்சத்திரங்கள் தான்.

துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் பற்றிய குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் இது ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம், இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும் என்று கூறினார். ஏற்கனவே முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆண்மை இல்லாதவர்கள் என விமர்னம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.