எதிர்வரும்  நாட்கள் பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் என்பதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அது மிக சவாலான காலமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவரை 3. 96 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 11 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.96 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை 82 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை இந்தியாவில் 24 லட்சத்து 32 ஆயிரத்து க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், அர்ஜென்டினா, கொலம்பியா, உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியது.

 

இதுவரை இந்தியாவில் சுமார் 65 லட்சத்து 21 ஆயிரத்து 654 பேர் குணமடைந்துள்ளனர் என்பது சற்று ஆறுதலான விஷயம், நாட்டில்  இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 32 நோயாளிகள் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து விடுபட ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. அதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவும் அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த ஆண்டே கொரோனா தடுப்பூசி கினடைக்கும் என கூறப்படும் நிலையில், அதுவரை மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டுமென உலக அளவில் கோரிக்கைகள் எழுகின்றன. இந்நிலையில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது கூறிய அவர், தற்போது நாட்டில் 3 தடுப்பூசிகள் பரிசோதனையில் இருந்து வருகிறது. 

ஒரு தடுப்பூசி மட்டும் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. மற்ற இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. அடுத்து வரும் இரண்டரை மாதங்கள் நாட்டிற்கு மிகவும் கடினமான  காலகட்டமாக இருக்கப்போகிறது. காரணம் எதிர்வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், குளிர்காலம் என்பதாலும் நோய் தொற்று தாக்கம் அதிகரிக்கும் ஆபத்தும் அதிகம் உள்ளது என எச்சரித்தார்.  எனவே அத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும்  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அது தொடர்பான விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையத் தொடங்கி இருக்கிறது என்று ஞானிகள் தெரிவித்துள்ளதும் ஒரு புறம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.