தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நடிகர் ரஜினிகாந்த்தான் என்று பிரபல ஜோதிட வல்லுநரான ஞானேஸ்வரர் தெரிவித்துள்ளார். 

ஜோதிடர் ஞானேஸ்வரர், ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன். முதலில் நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தார். தற்போது ரஜினி காந்த் வந்துள்ளார்.

நான் கணித்தபடியே 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நான் கணித்தவாரே மோடி, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றனர். 

தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்பு, ஐஸ்வர்யா ராய்-ன் மகள் ஆரத்யாவுக்கு உள்ளது. 

ஆரத்யா தன்னுடைய பெயரை ரோகிணி என்று மாற்றிக் கொண்டால் இது கண்டிப்பாக நிகழும் என்றார். இதேபோல், தமிழகத்தில் வரும் தேர்தலில நடிகர் ரஜினிகாந்த்தான் வெற்றி பெற்று முதலமைச்சராவார். 

2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கலாம் என்றும் ஜோதிட வல்லுநர் ஞானேஸ்வரர் தெரிவித்துள்ளார்.