Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. .!!

ஆகஸ்ட் 31 முதல்  செப்டம்பர் 04 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும், 
ஆகஸ்ட் 31 முதல்  செப்டம்பர் 03 வரை கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும் 

The next 24 hours are going to be windy with scores in these 5 districts: Meteorological Center Warning
Author
Chennai, First Published Aug 31, 2020, 1:07 PM IST

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும்,சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை (01.09..2020) உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் ,சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

The next 24 hours are going to be windy with scores in these 5 districts: Meteorological Center Warning

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச  மழைபெய்த விவரம்  (சென்டிமீட்டரில்) மாரண்டஹள்ளி (தர்மபுரி), ராயகோட்டை (கிருஷ்ணகிரி) தலா 7 சென்டிமீட்டரும், பாலக்கோடு (தர்மபுரி), சமயபுரம்  (திருச்சி ) தலா 6 சென்டிமீட்டரும், வலங்கைமான்  (திருவாரூர்), கிருஷ்ணகிரி, வாணியம்பாடி  (திருப்பத்தூர்), திருச்சி  சந்திப்பு, கதநடப்பட்டி  (வேலூர்) தலா 5 சென்டிமீட்டரும், திருப்பத்தூர் (சிவகங்கை),குளித்தலை (கரூர்), மேட்டூர் (சேலம்),பென்னாகரம்  (தர்மபுரி), ஆற்காடு (ராணிப்பேட்டை) திருபலபந்தல்  (கள்ளக்குறிச்சி) தலா4 சென்டிமீட்டரும், தோகைமலை (கரூர் ), வேலூர், ஆரணி  (திருவண்ணாமலை), சின்னக்கல்லார்  (கோவை ), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வேங்கூர் (கள்ளக்குறிச்சி), காரியாபட்டி  (விருதுநகர் ) தலா 3  சென்டிமீட்டரும் பதிவாகி உள்ளது, 

The next 24 hours are going to be windy with scores in these 5 districts: Meteorological Center Warning
ஆகஸ்ட் 31 முதல்  செப்டம்பர் 04வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், ஆகஸ்ட் 31 முதல்  செப்டம்பர் 03 வரை கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 01.09.2020  இரவு 11.30  மணி வரை  கடல் உயர் அலை 1.9 முதல் 2.9மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios