மேம்படுத்துவது அதிசயங்கள் நிகழ்ந்தால்  மட்டும் தான் சாத்தியம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது, ட்விட்டர் பக்கத்தில், ‘’எகிப்து நாட்டின் லக்ஸர் நகர் அருகே நைல் ஆற்றில் கொரோனா அச்சம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 17 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!

எகிப்தில் சொகுசுக் கப்பலில் பயணித்து, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அலெக்ஸான்டிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். கப்பலில் தவிக்கும் தமிழக பயணிகளின் அச்சம் போக்கப்பட வேண்டும்!

இந்தியாவில் 44% பள்ளிகளில் மின் இணைப்பு இல்லை, 43% பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இல்லை என்ற ஆய்வுத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மின்சாரம் இல்லாமல் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்துவதும், திடல் இல்லாமல் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதும் அதிசயங்கள் நிகழ்ந்தால்  மட்டும் தான் சாத்தியம்!

தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் 11 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. காவலர்களின் இந்த நிலைக்கு அவர்களின் பணிச்சுமை, மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.