பாஜகவும்- பரிவாரங்களும் பொய்களை நிறுவனமயமாக்கி எளிய மனிதர்களிடம் பரப்பும்போது தடுத்தாடுவதை விட அவற்றின் பின்புலத்தை அம்பலப்படுத்துவதே சிறப்பு என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ், திமுக என தேசிய கட்சியிலிருந்து மாநில கட்சிகள் வரை சமூகவலைதளங்களில் விமர்சனங்கள், கருத்துகள் என பலவகைகளில் தங்களுக்கு சாதகமாக பதிவிட்டு வருகின்றன. இவற்றில் எது உண்மை- பொய் என சாதாரண அடித்தட்டு மக்களுக்கு விளங்குவதில்லை.

 

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’பத்திரிகையாளர் அதிஷாவின் 'பொய் சொல்லும் கலை' நூலினை கிண்டிலில் வாசித்தேன். ஹிட்லரின் பொய்கள் ஏற்படுத்திய பேரழிவுகளைப் போல பாஜக உற்பத்தி செய்து பரப்பும் பொய்கள் இந்தியாவுக்கு எத்தனை ஆபத்தானவை என்பதை விவரிக்கும் முக்கியமான நூலாக வந்துள்ளது. பாஜகவும்- பரிவாரங்களும் பொய்களை நிறுவனமயமாக்கி எளிய மனிதர்களிடம் பரப்பும்போது தடுத்தாடுவதை விட அவற்றின் பின்புலத்தை அம்பலப்படுத்துவதே சிறப்பு என்கிறது இந்நூல். இந்த வாட்ஸ்-அப் யுகத்தில் 'பொய் சொல்லும் கலை'அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்’’ என பதிவிட்டுள்ளார்.