கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் 50 பேரில் முதல் இடத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளார். 

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கடுமையாக முயன்று வருகின்றன.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த புதுமையான யோசனைகளை முன்வைத்த 50 பேர் கொண்ட பட்டியலை இங்கிலாந்தின் பிராஸ்பெக்ட் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனன் பிடித்துள்ளார்.

இந்தியாவிலேயே ஆரம்பத்தில் கேரளத்தில் தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. அதை வைத்து கேரளாவை பலர் விமர்சனம் செய்தனர். பிறகு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அவர்களில் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதை அந்த இதழ் மிகவும் பாராட்டி இருக்கிறது. அண்டை மாநிலங்கள் ஷைலஜாவை கொண்டாடித் தீர்த்தன.