முத்தலாக் முறை ஒழிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய சமூகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய பிரதமர் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான பேகம் சுல்தான் நவீன முஸ்லிம் சமூகத்தை உருவாக்க பாடுபட்டார் என்று புகழ்ந்தார். இன்று முத்தலாக் முறை ஒழிப்புக்கு பிறகு நாடு அந்த திசையில் முன்னேறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் இடைநிற்றலை குறைந்து விட்டதாக கூறிய பிரதமர் பாரம்பரியமிக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு மினி இந்தியா என்று பாராட்டினார்.

புதிய இந்தியாவை உருவாக்க பொதுவான தளம் தேவை என்றும் அதில் ஆத்ம நிர்மா என்றும் அவர் பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.