Asianet News TamilAsianet News Tamil

சமூகநீதிக்கு மிகப் பெரிய ஆபத்து.. மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா? முதல்வர் ஸ்டாலின்..!

10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்  நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இதில், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதநிதிகள் கலந்து கொண்டனர். 

The greatest danger to social justice.. CM Stalin..!
Author
First Published Nov 12, 2022, 11:33 AM IST

சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூகநீதி கொள்கை என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்  நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இதில், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். 

இதையும் படிங்க;- அடாத மழையிலும் விடாது பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்;- பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. சமூக கல்வி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரியானது.  சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூகநீதி கொள்கை. இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை கூறி வந்த சிலர், 10% இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கின்றனர். அதன் சூட்சமத்தை விளக்கமாக சொல்லத்தேவையிலை. அரசியல் லாப நோக்கம் குறித்து பேச விரும்பவில்லை. சமூகநீதி கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

சமூக கல்வி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரியானது. சமூகம், கல்வியில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு சரியானதாக இருக்கும். இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என உச்சநீதிமன்றமே பலமுறை கூறியிருந்தது. மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா? ஏழைகளுக்கு எதிரானது என்பதால் 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டியது நமது கடமை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios