அடாத மழையிலும் விடாது பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!
சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே!
இதையும் படிங்க;- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?
சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். முதல்வர் ஸ்டாலினின் நன்றி பதிவு மழையில் பணியாற்றும் ஊழியர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க;- எதையும் சொல்லி விட்டு செல்வதல்ல இந்த அரசு.. போறபோக்கில் அதிமுகவை டேமேஜ் செய்த முதல்வர் ஸ்டாலின்.!
இதையும் படிங்க;- நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.. திருமண விழாவில் முதல்வர் பேச்சு..!