மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய பல்வேறு தரப்பிப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. 7 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராமசுகந்தன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார். ஆளுநரின் பரிந்துரையில் இந்த விவகாரம் இருப்பதால் அவரே முடிவெடுப்பார். அவர் முடிவெடுக்க எந்தத் தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.