MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவிடம் சாதித்த பிரேமலதா... தேமுதிகவுக்கு இத்தனை தொகுதிகளா..? வயிற்றெரிச்சலில் கூட்டணி கட்சிகள்..!

திமுகவிடம் சாதித்த பிரேமலதா... தேமுதிகவுக்கு இத்தனை தொகுதிகளா..? வயிற்றெரிச்சலில் கூட்டணி கட்சிகள்..!

தேமுதிக இணைவதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் தொகுதி பங்கீடு சம்பந்தமான நெருக்கடி ஏற்படுத்தலாம்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 19 2026, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : X/Twitter

தேமுதிக இன்று திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. 2005-ல் கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய கட்சி முதல் முறையாக பழம் நழுவி பாலில் விழுந்து திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதை உறுதி செய்தார்.

மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளப் பதில் தேமுதிகவை வரவேற்று "கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. கேப்டன் விஜயகாந்த் கலைஞரை மிகவும் மதித்தவர். இந்த கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக ; கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். பிரேமலதா இது தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி நடந்தது என்றும், அதிமுக கூட்டணியில் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : X/Twitter

இந்நிலையில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் வரை வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தேமுதிக இணைவதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் தொகுதி பங்கீடு சம்பந்தமான நெருக்கடி ஏற்படுத்தலாம். கூட்டணியில் தொடர்ந்து வரும் விசிகவுக்கு ஆறு சீட்டு, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஆறு சீட்டுகளே ஒதுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் புதிதாக கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் சீட், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கினால், பிற கட்சிகள் அதிக தொகுதி கோரலாம்.

34
Image Credit : X/Twitter

இதனால் தொகுதி பேச்சுவார்த்தைகள் சிக்கலாகலாம். ஆனால் ஒட்டுமொத்த கூட்டணி வலுவடையும் என்று மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். திமுக இப்போது கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி 200+ தொகுதிகள் வெல்லும் நம்பிக்கையில் உள்ளது. 2016-ல் தேமுதிக, திமுக கூட்டணிக்கு அருகில் வந்தும் கூட்டணி தவறியது. அதனை மனதில் வைத்து இப்போது பலரும் இதை ‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ என விமர்சிக்கின்றனர்.

44
Image Credit : premalatha

இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு பெரும் பலமாக அமையும். அதேவேளை உள் கூட்டணி சமநிலை பேச்சுவார்த்தைகளில் சவாலாக இருக்கும். இந்நிலையில், ‘‘இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 4 பேர் குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்’’ என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அதேவேளை மதிமுக தலைவர் வைகோ, ‘‘திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
பிரேமலதா விஜயகாந்த்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Recommended image3
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது..! பிரேமலதாவுக்கு சாபம் விட்ட பாஜக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved