MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Politics
  • நேற்றுதானே தோலுரித்தேன்..! என்னதான் ஆச்சு இந்த முதல்வருக்கு..? எடப்பாடியார் ஆவேசம்..!

நேற்றுதானே தோலுரித்தேன்..! என்னதான் ஆச்சு இந்த முதல்வருக்கு..? எடப்பாடியார் ஆவேசம்..!

எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள் ஸ்டாலின்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 19 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்...
Image Credit : Asianet News

சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்...

‘‘வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள் ஸ்டாலின்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. திறந்ததெல்லாம் அதிமுகவின் திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே. இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் ஸ்டாலின். ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக்கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வேடிக்கை காட்டும் முதல்வர்
Image Credit : Asianet News

வேடிக்கை காட்டும் முதல்வர்

நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.

Related Articles

Related image1
தோல்வி அடைய வாழ்த்துகள்.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் சாபம் விட்ட இபிஎஸ்..
34
அதிமுகவின் சாதனைத் திட்டங்கள்
Image Credit : Asianet News

அதிமுகவின் சாதனைத் திட்டங்கள்

அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த முதல்வரின் ஒரே பங்களிப்பு.

7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள்.

44
 ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்?
Image Credit : Asianet News

ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்?

இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை. அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள் ஸ்டாலின். ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..?! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
தோல்வி அடைய வாழ்த்துகள்.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் சாபம் விட்ட இபிஎஸ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved