இந்நிலையில்  24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் கொரதண்டவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் குளோபல் வாமிங் போன்று இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் 24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

044-29510400

044-29510500

94443 40496

87544 48477

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்காணும் தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்புக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.
பொதுமக்கள் யாரேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமானால் உடனடியாக மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.