Asianet News TamilAsianet News Tamil

மக்கள் எதை விரும்புகிறார்களோ.! அதைத் தான் அரசு செய்து வருகிறது.! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் ஜீலை 31ம் தேதியோடு அறிவித்திருந்த ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.27 லட்சத்தினை கடந்திருக்கிறது. இன்னும் ஊரடங்கு தொடருமா? என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்..
 
The government is doing what the people want! Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy informed.!
Author
Tamil Nadu, First Published Jul 29, 2020, 9:28 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் ஜீலை 31ம் தேதியோடு அறிவித்திருந்த ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.27 லட்சத்தினை கடந்திருக்கிறது. இன்னும் ஊரடங்கு தொடருமா? என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்..

The government is doing what the people want! Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy informed.!

"1,196 நடமாடும் பரிசோதனை வாகனம் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சிகிச்சையளிப்பதற்கு போதுமான வசதிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பரிசோதனையை மேற்கொள்ளும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் மக்களுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டுள்ளன. அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். மக்கள் எப்போதும் போல தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios