முகக் கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முகக் கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;-
* தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளது.
* ஒவ்வொரு நாளும் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.
* தங்கு தடையின்றி மக்கள் வெளியில் செல்வதால் கொரோனா நோய் பரவலை இனி கண்டுபிடிப்பது சிரமம் உள்ளது.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பது தொடர்ந்து நீடிக்கும்.
* மருத்துவ நிபுணர்கள், காவல்துறையினரின் செயல்பாட்டால் நோய் தொற்று குறைந்து வருகிறது.
* சாதாரண நோயை கண்டறிய தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம் பெறுவர்.
* முகக் கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும்.
* மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க முடியாது.
* காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
* மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
* அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளது.
* அனைத்து தொழிற்சாலைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
* மக்கள் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
* காவல்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.
* அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதை பற்றி கவலையில்லை. மக்கள் உயிரை காப்பதே முக்கியம்.
* அரசு விதிகளை மக்கள் தீவிரமாக பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
* டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* காசிமேடு துறைமுகத்தில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை, முக கவசம் அணிவதில்லை.
* 40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
