Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார்..தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 

The General Committee did not approve his election as the Ops Coordinator The EPS team petitioned the Election Commission
Author
Chennai, First Published Jun 29, 2022, 10:35 AM IST

பொதுக்குழு கூட்டம் செல்லாது

அதிமுகவில ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் தரப்பு இந்த பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்குட்பட்டு நடைபெறவில்லையென தெரிவித்தது. மேலும் தனது ஒப்புதல் இல்லாமல் அடுத்த பொதுக்குழு கூட்ட முடியாது எனவும் கூறப்பட்டது.

ஒற்றைத்தலைமை விவகாரம்.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வந்த சோதனை.. சுயேட்சைகளாக மாறிய ர.ர.க்கள்!

The General Committee did not approve his election as the Ops Coordinator The EPS team petitioned the Election Commission

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் 23-ம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கட்சி அவைத் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.  இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லையன்றும், கூட்டத்தில் யாருடனும் விவாதிக்காமல், 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்ததாக குறிப்பிட்டார். 
மேலும் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவு திட்டங்களை கூட பொதுக்குழுவில் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லையென்றும் கூறியுள்ளார். கட்சி விதியின்படி பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்குமே உள்ளது. கட்சியின் அவைத் தலைவர் பொதுக் குழுவை கூட்ட முடியாது. ஆனால் ஜூலை 11 தேதி பொதுக் குழுவை நடைபெறும் அறிவித்துள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

The General Committee did not approve his election as the Ops Coordinator The EPS team petitioned the Election Commission

பதில் மனு தாக்கல் செய்த இபிஎஸ்

இந்தநிலையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்  அதில்,  ஓ.பன்னீர் செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது  மாற்றி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.  மேலும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லையென்றும் எனவே ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லையென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் தேவையில்லையென கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார? இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

Follow Us:
Download App:
  • android
  • ios