அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார? இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு வர இருப்பதாக கூறி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Excitement over the poster pasted saying that Sasikala is coming to the AIADMK headquarters

3 ஆக பிரிந்த  அதிமுக

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் அதிமுக 3 ஆக பிளவுபட்டுள்ளது. சசிகலா,ஓபிஎஸ், இபிஎஸ் என பிரிந்துள்ளது. இதன் காரணமாக அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதிமுக  பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என தனித்தனியாக செயல்படுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு நிர்வாகிகள் 95% பேர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும்,மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இபிஎஸ் தரப்போ அதனை கண்டு கொள்ளாலம் பொதுக்குழுவிற்கான பணியை துவங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனை முற்றியுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளதுஇந்தநிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அதிமுகவை மீட்க பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். 

ஒற்றைத்தலைமை விவகாரம்.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வந்த சோதனை.. சுயேட்சைகளாக மாறிய ர.ர.க்கள்!

Excitement over the poster pasted saying that Sasikala is coming to the AIADMK headquarters

Excitement over the poster pasted saying that Sasikala is coming to the AIADMK headquarters

ஓபிஎஸ்யிடம் இரட்டை இலை..?

இது போன்ற நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3 வித போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிள்ள போஸ்டரில் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒன்றரை கோடி தொண்டர்களின் பாதுகாவலர் ஐயா ஓபிஎஸ் என குறிப்பிடப்படுள்ளது. கழகமும் சின்னமும் ஓபிஎஸ்யிடம் வழங்கப்பட்டதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் தலைவா வா தலைமையேற்க வா என்றும் 1.5 கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பம் எடப்பாடியார் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை தலைமை ஒன்றே தீர்வு என்றும் அந்த போஸ்டரில் அச்சடிக்ப்பட்டுள்ளது.

AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !

Excitement over the poster pasted saying that Sasikala is coming to the AIADMK headquarters

அதிமுக அலுவலகத்தில் சசிகலா

ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில்  அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே, அதிமுக பொதுச்செயலாளரே சின்னம்மா என அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் கழகத்தை காத்திட, எங்களை வழி நடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக, வருக என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவு பட்ட நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ச்சிகலா வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இபிஎஸ் ஆதரவாளர் அதிமுக தலைமை அலுவலகம் அருகே குவிந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்

AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios