தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.., "அதிமுகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சிப்பதுகுறித்து, அதாவது 9 ஆண்டுகாலமாக தமிழகத்தை அதிமுக கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சங்கி என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்ததோடு திமுக ஆட்சிக்கு வந்தால் ராஜேந்திரபாலாஜிக்கு நிச்சயம் சிறைதான். பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ஆண்டு தண்டனை. அப்படிப்பார்த்தால் அவர் ஆயுள் முழுக்க உள்ளெ இருக்க வேண்டியதுதான் என்று எச்சரித்தார்.

திமுகவின்  கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி, ’’ 10 நிமிடம் சிங்கமாய் கர்ஜித்தார் தலைவர். ,பதில் சொல்ல வக்கின்றி ஒரு மணி நேரம் ஊளையிட்ட நரி. அதிக ஒலி எழுப்பும் காலிப் பாத்திரம். கூத்தாடிய குறைகுடம். அவர் தலைவர் குப்புற விழுந்து குபேரனானார். நாளை கம்பி எண்ணி கழி திண்பார்’’என்று கடுமையாக சாடியிருக்கிறார்.