தென் மாவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தனி மரியாதை உண்டு. அதை நிரூபிப்போம்.. மார்தட்டும் பி.வி.கதிரவன்.
பாமகவுடனான கூட்டணிக்காகவே 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசரமாக அமலாகியுள்ளது என்றார். உசிலம்பட்டி தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சயின் வேட்பாளராக நான் களமிறங்குகிறேன் " என தெரிவித்தார்.
தென் மாவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தனி மரியாதை உண்டு .அதை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி கதிரவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்
உசிலம்பட்டியில் உதய சூரியன் சின்னத்தில் பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கதிரவன், கடந்த தேர்தலில் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு 1லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் பெற்றோம்.
5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம், தமிழகத்தில் மட்டும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார். கருணாநிதி , ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் மரியாதை குலைந்துள்ளது. கடந்த 10 ஆண்டில் தமிழகம் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பின்னோக்கி சென்றுள்ளது.
தென் மவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தனி மரியாதை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என கூறினார். தேர்தல் நெருங்கும் போது அவசரமாக 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காரணம் என்ன? டி.என்.டி இட ஒதுக்கீட்டு குழுவும் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்ற அவர், பாமகவுடனான கூட்டணிக்காகவே 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசரமாக அமலாகியுள்ளது என்றார். உசிலம்பட்டி தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சயின் வேட்பாளராக நான் களமிறங்குகிறேன் " என தெரிவித்தார்.